Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் ஆலோனைக் குழுவில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. செயலாளர் பான் கீ மூனிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை ஐ.நா வின் அமைதிகாக்கும் ஆலோசனைக் குழுவிற்கு நியமித்தமை குறித்து அதிருப்தி வெளியிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அண்மையில் ஐ.நா செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அவரின் அக்கருத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக் கிளை உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுக்காக நபர் ஒருவரை நிராகரிப்பது நியாயமற்றது எனவும் இவ்வாறான விமர்சனங்கள் ஐக்கிய நாடுகளின் ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com