மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கடந்த 4ம் தேதி மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிறகு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ‘’திமுக தலைவர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன்’’ என்று கூறினார்.
திமுகவில் பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நடந்த பொதுக்குழுவில் வற்புறுத்தியதை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் மு.க.அழகிரி, கட்சித்தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியி ருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.



0 Responses to திமுக தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன் - மு.க. அழகிரி