9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை14.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ நா வை நோக்கி செல்ல இருக்கின்றது 05.02.2011 அன்று Brussel லில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் கடும் குளிர் மற்றும் பனி மத்தியில் தனது இலக்கை தேடி செல்கின்றது.
நடைபயணம் செய்பவர்கள் தங்கள் கால்கள் வீங்கி நோகும் பொழுதிலும் 9 ஆவது நாளாக இன்று Luxenburg ஊடாக நடக்கின்றனர்..
நடைபயணம் செய்பவர்களில் ஒரு சகோதரன் கூறுகையில்" தனிநபர் அறிமுகம் அல்லாமால் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே ஒரு எமது தலைவரின் பெயரால் இணைந்து இருக்கின்றோம் அந்த வகையில் எமக்கு அனைத்து மக்களும் சொந்த உறவுகள் போல் எம்மை கவனிக்கின்றார்கள், தொடர்ந்து அவர் கூறுகையில் "நடக்கும் எம் முன்னே எமது தேசிக் கொடி உயர பறக்கின்றது அதில் எமது தலைவர் எம் முன்னே செல்கின்றார் அவருக்கு பின்னர் தான் தாம் எவ்வித கஷ்டமும் அல்லாமல் நடக்கின்றனர்."
யேர்மனிய உறவுகளே,
நீதியை நிலை நாட்ட நடைபயணத்தை மேற்கொள்ளும் எமது சகோதரங்களை யேர்மன் எல்லைப் பகுதியான Perl (Saarland ) எனும் நகரத்தில் 14.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணிக்கு நாம் அனைவரும் உணர்வு ரீதியாக வரவேற்க ஒன்றுகூடுவோம்.
முகவரி: Zur Moselbrücke,
66706 Perl
அத்தோடு 5.03.2012 அன்று நடைபயணம் ஐ நா சபை , ஈகைப்பேரொளி முருகதாசன் திடலுக்கு முன்னர் சென்றடையும். அன்றைய மாபெரும் பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு எமது நீதிக்கான உரிமைக் குரலை மீண்டும் முழங்க செய்வோம் .
யேர்மனிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல் - நடைபயணம் யேர்மனிக்கு வந்தடைகின்றது!
பதிந்தவர்:
தம்பியன்
13 February 2012



0 Responses to யேர்மனிய மக்களுக்கு முக்கிய அறிவித்தல் - நடைபயணம் யேர்மனிக்கு வந்தடைகின்றது!