எங்களது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம், உலகெங்கும் 50வது நாளை எட்டியிருக்கிறது. தமிழகத்தில் இந்தப் படம் ஓடிவிடக்கூடாது, இலங்கையின் போர்க்குற்றம் அம்பலமாகிவிடக்கூடாது - என்கிற உள்நோக்கத்துடன் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து பிப்ரவரி 10ம் தேதியன்று தமிழகமெங்கும் உச்சிதனை முகர்ந்தால் மீண்டும் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுவெளியீட்டை ஒட்டி சென்னையில் 8.2.12 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாபெரும் மக்கள் அரங்கம் ஒன்றை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்கள் இணைந்து நடத்துகின்றனர். தி.நகர் - முத்துரங்கன் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமை வகிக்கிறார். வைகோ, தமிழருவி மணியன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும், இயக்குநர் சேரன் முதலான கலைஞர்களும், காசி ஆனந்தன், புலமைப்பித்தன், தாமரை உள்ளிட்ட கவிஞர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இதுகுறித்து முன்னதாகவே செய்தி வெளியிட்டு உதவும்படியும், நிகழ்ச்சிக்கு செய்தியாளரை அனுப்பிவைக்கும்படியும் அன்புடன் கோருகிறேன்.
நன்றி! வணக்கம்!
என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
"உச்சிதனை முகர்ந்தால்" மீண்டுவருவதை விளக்கும் பொதுக்கூட்டம் நாளை தி.நகரில் நடைபெறுகின்றது
பதிந்தவர்:
தம்பியன்
07 February 2012



0 Responses to "உச்சிதனை முகர்ந்தால்" மீண்டுவருவதை விளக்கும் பொதுக்கூட்டம் நாளை தி.நகரில் நடைபெறுகின்றது