சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகள் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக சிறிலங்கா அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி வரும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளது.



0 Responses to போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணை!