Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக தமிழக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால் தென்னிந்திய மீனவர்கள் மூவர் கடந்த 11 ம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், கைதுசெய்துள்ள மீனவர்களை கங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படைப் கொமாண்டர், ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் நாளை முதல் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டின மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கைதாகியுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் நாளை முதல் போராட்டம்; தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com