Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால், நீதிக்காய் ஒன்றுபடுமாறு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தோழர் தியாகு விடுத்துள்ள அழைப்பில்,

சிங்கள அரசானது சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், சர்வதேசத்தை திசை திருப்பவே சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஏற்படுத்தியிருந்தது. பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் பலவும், சிறிலங்காவின் கண்துடைப்பு நடவடிக்கைதான், இந்த நல்லிணக்க ஆணைக்குழு என தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தான் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மீது சர்வதேசம் நம்பிக்கையற்றுள்ள நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைச் சபையில் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை சமர்பிக்க சிறிலங்கா அஞ்சுகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போக்கினை உலகிற்கு அம்பலப்படுத்தவும், ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரவும், தமிழீழ மக்களை பாதுகாக்கவும் ஐ.நாவின் முன்னால் அணிதிரள வேண்டும்.

அமைப்பு வேறுபாடுகள் அன்றி, ஒரே கோரிக்கையுடன் அனைவரும் அணிதிரள வேண்டியது அவசியம்.

தமிழீழ தனியரசுதான், தமிழீழ மக்களுக்கான பாதுகாப்பு என்பதனை வலியுறுத்தும் வகையில், சர்தேச கண்காணிப்புடன் ஒரு பொதுசன வாக்கெடுப்பினை தமிழீழத்தில் நடாத்த, ஐ.நாவை வலியுறுத்த நீதிக்காய் அணிதிரள வேண்டும். புலம்பெயர் நாடுகளில் எமக்கு கிடைத்திருக்கின்ற சனநாயக வாய்ப்பினை, தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.

ஐ.நா மனித உரிமைச் சபை தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் நாள், அனைத்து அமைப்புக்களும் ஒருமித்த குரலாக, நீதிக்காய் அணிதிரள தமிழ்த் தேசியக் இயக்கத்தின் சார்பாக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுவதாக தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

காணொளி

0 Responses to ஒன்றுபட்ட குரலாய் ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னால் அணிதிரள்வோம்!- தோழர் தியாகு (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com