Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகத்தின் நான்கு முக்கிய தலைவர்கள் தமது எதிர் காலத்தை புதுப்பிக்க வேண்டிய பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளார்கள். உலகத்தின் தலைவிதியை மாற்றப் போகிறோம் என்று மார்தட்டிப் புறப்பட்ட இவர்களுடைய தலைவிதி இப்போது தேர்தலில் மாட்டுப்பட்டு கிழிந்த கொடியாக பறக்கிறது.

இந்த நால்வருடைய கதிரைகளும் ஆட்டம் கண்டு விழுகிறதோ இல்லையோ ஈரானிய அதிபர் சற்று முன்னர் மேலும் நான்கு அணு குண்டு ராக்கட் தலைகளை உருவாக்க உத்தரவிட்டார்.

இதில் முதலாவது நபர் பிரான்சிய அதிபர் ஸார்கோஸியாகும். நேற்று ரி.எப்1 தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய அவர் தான் பிரான்சில் நடைபெறவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில் மத்திய வலதுசாரி கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சியோஸ் கொலன்டியிடம் இவர் தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. சிரியாவில் மாற்றம், ஐ.நாவை விட்டுவிட்டு தனி வழி நடத்தல், ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார நெருக்கடி ஆகிய மூன்று தலைமை விடயங்களுக்கு கடந்த சில வருடங்களாக தலைமை வகித்துவருகிறார் ஸார்கோஸி. இவர் வெளி நாடுகளில் பெற்றுள்ள புகழை தனது சொந்த நாட்டில் பெறவில்லை.

ஸார்கோஸி தோல்வியடைந்தால் ஈரான், சிரியா, சீனா போன்ற நாடுகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது தெரிந்ததே. பிரான்சிய அதிபர் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவது ஏப்ரல் மாதத்திலும் அடுத்தது மே மாதத்திலும் நடைபெறும். இரு சுற்றுக்களிலும் ஸார்கோஸி வென்றால் மட்டுமே அவருடைய திட்டங்கள் தொடரும்.

இவரைப் போல வாக்கெடுப்பை வரும் நவம்பர் சந்திக்க வேண்டிய நிலையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருக்கிறார். இவ்வாரம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் இவருக்கு ஐம்பது வீதமான அமெரிக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கடந்த எட்டு மாதகாலமாக இவருடைய பொருளாதார திட்டங்கள் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பியுள்ளதால் இந்த ஆதரவு கிட்டியுள்ளது. பின்லேடன் கொலை, பாலஸ்தீன பிரச்சனையில் முன்னேற்றம், ஈராக்கில் இருந்து படைகளை வெளியேற்றியது போன்ற சர்வதேச விவகாரங்களும் இவருக்கு நல்ல பெயரை தேடிக் கொடுத்துள்ளன.

இவர்கள் இருவருக்கும் போட்டியாளராக மறுபடியும் அரசியல் அரங்கிற்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர் ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றினாகும். ஸார்கோ}ஸி, ஒபாமா இருவருக்கும் முன்னர் அடுத்த மாதமே இவர் அதிபர் தேர்தலை சந்திக்க இருக்கிறார். தேர்தலில் இவருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. தோல்வி ஏற்பட்டாலும் வாக்கு விழும் விகிதத்தை வீட்டில் இருந்தே கணினியில் பார்த்தபடி சைபர் கிரைம் நடாத்தி வெற்றி பெறலாம் என்று குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலொன்றில் இவர் மோசடி சைபர் கிரைம் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நான்காவதாக முக்கியம் பெறுபவர் தற்போதய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனாகும். இவர் அடுத்த தடவை இந்தப் பதவியில் இருக்கமாட்டார் என்று முன்னரே அறிவித்துள்ளார். அப்படியானால் இவருடைய எதிர் காலமென்ன என்பது முக்கிய கேள்வியாகும்.

இன்று உலக வங்கியின் தலைவர் றோபேட் ஸோலிக் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடைய பதவிக்காலம் ஐந்து வருடங்களில் முடிவடைந்துள்ளது. மறுபடியும் பதவி வகிக்கப் போவதாக இவர் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அரசும் இப்பதவிக்கு இதுவரை எவருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. முன்னர் இப்பதவியை கிளரி கிளின்டன் ஏற்க மறுத்திருந்தார். இன்றுள்ள நிலையில் இவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என்று கருதப்படுகிறது.

இப்படி நான்கு தலைவர்களும் தமது அடுத்த பதவிக்காலம் பற்றிய கவலைகளில் கிடக்க ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட் அடுத்து மேலும் நான்கு அணு குண்டு ராக்கட்டுக்களை உருவாக்கும்படி சற்று முன்னர் தமது விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டார். ஏற்கெனவே முதலாவது அணு குண்டு ராக்கட்டை தயாரித்து முடித்துவிட்ட ஈரான் இப்போது மேலும் நான்கு அணு குண்டுகளுக்கு ஆடர் கொடுத்துள்ளது.

மேலும் நான்கு எதிரி நாடுகளை நோக்கி அணு குண்டு ஏவுகணைகளை குறி வைக்க வேண்டுமென்று அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் ஆரம்பித்துள்ள முறுகலில் கோபமடைந்த ஈரானிய அதிபர் நிலை தடுமாறி முதல் தடவையாக இந்த விவகாரத்தை மிக வெளிப்படையாக பேசியுள்ளார். முன்னர் சக்தி வளத்திற்காக அணுப்பிரிப்பில் ஈடுபடுவதாக சொன்ன ஈரான் இப்போது தனது முகமூடியை கிழித்துள்ளது. மேற்கண்ட நான்கு தலைவர்களும் பதவி நாற்காலியை காப்பாற்றும் கவலையில் இருக்க ஈரான் புத்திசாதுரியமாக அடுத்த நான்கு அணு குண்டுகளை உருவாக்கி முடிக்கப்போகிறது.

0 Responses to ஆளுக்கு ஓர் அணு குண்டு ஈரான் அவசரமாக தயாரிக்கிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com