Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாதத்தால் நசுக்கப்படும் தமிழ் இனத்திற்கு நிரத்தரமான தீர்வு கிடைக்கவேண்டும். இதில் ஐநாவின் தலையீடு அவசியம் தேவை என்று ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் இன்று 6வது நாளாகவும் எழுச்சியுடன் தொடர்கிறது.

இந்த நடைபயணத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் இரண்டு இளையோர்கள் இவர்களுடன் இணைந்து சுமார் பத்துக் கிலோமீற்றர் தூரங்கள் நடந்திருக்கின்றனர்.

அத்துடன் இவர்களது அகிம்சைப் போராட்டத்தின் காரணத்தினை கேட்டறிந்த பெல்ஜிய காவல்துறையினர் தமது ஆதரவினையும் தெரிவிப்பதாக கூறி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகள் வெளியேற்றப்பட்டு தமிழர்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு ஐ.நா உதவ வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இன்று இவர்களது பாதங்கள் நடைபோடுகிறது.

கொத்துக்குண்டுகளை வீசி எமது தமிழ் உறவுகளை கொத்து கொத்தாக கொன்றொழித்த சிங்கள அரசின் கொடுர முகம் சர்வதேச அரங்கில் அம்பலமாக வேண்டும் எனவே கொட்டும் குளிரனை பொருட்படுத்தாது இவர்கள் நடத்தும் நீதிக்கான பயணத்திற்கு புலத்தில் வாழுகின்ற தமிழ் உறவுகள் ஆதரவு கரங்களை நீட்டவேண்டும்.

அத்துடன் மார்ச் 5ம் திகதி முடிவடையவுள்ள இவர்களது நடைப்பயணத்தில் அனைவரும் திரண்டுவந்து ஒருமித்த குரலில் கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். நாம் தோற்றுப்போன இனம் அல்ல நேற்று வீழ்ந்தாலும் நாளை எழுவோம் என்பதை உலகிற்கு உணர்த்திட வாருங்கள்.

தமிழரின் தாகம் இன்னும் தீரவில்லை என்பதை சர்வதேசம் உணர்ந்திட பெரும் திரளாய் அணிவகுத்து வாருங்கள்.

0 Responses to நேற்று வீழ்ந்தாலும் நாளை எழுவோம் என்பதை உலகிற்கு உணர்த்திட வாருங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com