பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்கள் இணைந்து கொள்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின், பொது ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்பட்ட போது எதிர்ப்பை வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் இன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருகின்றனர்.
சரத் பொன்சேகா ஓர் சாதாரண நபர் அல்ல. சட்ட ரீதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாற்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்.
இதனைவிட, உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக ஆட்சியாளர்கள் சரத் பொன்சேகாவை வர்ணித்தனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைவு!
பதிந்தவர்:
தம்பியன்
08 February 2012



0 Responses to பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைவு!