தனி ஈழம் தொடர்பில் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கையை வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் தலையீட்டின் பெயரில் இதை போன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் கிடைப்பதற்கு ஐ.நா சபை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிகை விடுத்துள்ளார்.
மேலும் இதற்கு இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



அப்பா கருணாநிதி! முன்பெல்லாம் உன் குடும்பமும் ஆட்சி அதிகாரமும் தான் முக்கியம் என்று எத்தனையோ நாடகங்கள் நடத்தினாய். லச்சகனக்கில் நம் சமூகத்தினர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டும் நீயும் ஜெயலலிதாவும் வாயை திறக்கவில்லை. இதனால் நீ பொது தேர்தலில் தோற்று பதவியையும் அதிகாரத்தையும் இழந்தாய். அப்பொழுதும் நீ திருந்தவில்லை. உன் அருமை மகள் சிறையில் சில வாரங்கள் அடைபட்டு கிடந்தபோதுதான் நீ கண் கலங்கினாய். இப்பொழுது நீ உண்மையாக ஈழ தமிழர்களுக்காக சுதந்தர நாடு கேட்கிறாயா அல்லது இதுவும் நடிப்பா? உண்மையில் உனக்கு ஈழ தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால் காங்கிரஸ் அரசாங்கத்தை ஈழ தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்று தருமாறு செய். ஈழ தமிழர்களின் அழிவுக்கு பேருதவி செய்த காங்கிரஸ் அரசாங்கம் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.