Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது. நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சிந்திய குருதியும், தியாகங்களும் வீண் போகாது! தமிழீழம் ஒரு நாள் உருவாகும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com