Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தகாலத்தில் கூட வழங்காத தனி ஈழத்தை கருணாநிதி கோருவதால் வழங்க முடியுமா? சர்வஜன வாக்கெடுப்பு குறித்து கருணாநிதி மட்டுமல்ல, சோமவன்ஸ கூட கருத்து வெளியிடுகின்றார்.

கருணாநிதியின் கருத்து இந்திய அரசின் கருத்தல்ல” என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. யுத்தத்தால் கூட பெறமுடியாதவற்றையே தமிழகக் கட்சிகள் கோரி நிற்கின்றன என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிஈழம் வழங்கப்பட மாட்டாது என்றும் இலங்கை திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சரவைப் பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:இலங்கை வந்துசெல்லும் இந்தியக் குழு அங்கு சென்று இங்குள்ள நிலைமைகளைத் தெளிவுபடுத்தும். தமிழகக் கட்சிகள் அரசியல் கோணத்தில் செயற்படாவிட்டால் உண்மை நிலைவரங்களை உணரலாம்.

யுத்தத்தால்கூட முடியாமல் போனதையே தமிழகக் கட்சிகள் கேட்கின்றன. யுத்தகாலத்தில் கூட வழங்காத தனி ஈழத்தை தற்போது வழங்கமுடியுமா?

தனிஈழம் அமையவேண்டும் என சர்வஜன வாக்கெடுப்பு குறித்துக் கருணாநிதி மட்டுமல்ல, ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசேகர கூட கருத்து வெளியிடுகின்றார். கருணாநிதியின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்றார்.

0 Responses to கருணாநிதியின் கூற்று இந்தியாவின் கருத்தல்ல என்கிறது இலங்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com