Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக்குழு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்திப்பதை விட தமது அரசால் முற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களைப் பார்வையிட்டும், அரசியல்வாதிகளை சந்திக்கும் திட்டங்களே அதனது நிரலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த குழு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவையும் முதலில் சந்தித்து பேசுவதாகவும் அதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு சென்று சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்திக்கும். அங்கு மதிய விருந்தில் கலந்து கொள்ளும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளையும் சந்திப்பர்.

வட பகுதியில் புகையிரதப் பாதை மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும் மதவாச்சி சென்று பின்னர் முல்லைத்தீவு பகுதியையும் பார்வையிடுகிறார்கள். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஏப்ரல் 19ம் திகதி காங்கேசன்துறை துறைமுகத்தில் இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிடுவர்.

பின்னர், களுத்துறையில் புகையிரதப் பணிகளை பார்வையிட்ட பின்பு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசுவர்.

20ம் திகதி கிழக்கு மற்றும் மலையகத்திற்கு சென்று மக்களை சந்திப்பர். பின்னர் மட்டக்களப்பு சென்று முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து பேசுவர்.

21ம் தேதி காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனவும் அந்த நிகழ்ச்சி நிரலில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விருந்து நிகழ்வை ரத்து செய்ய குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

20ம் திகதி மாலை மஹிந்தவை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி நாடாளுமன்றக் குழுவில் இடம்பிடித்துள்ள தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழு, பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு செல்வதாகவும் முகாம்களுக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை பார்ப்பதாகவும் போர் நடைபெற்ற இடத்திற்கு செல்வதாகவும் நிகச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை புறப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் செய்தியாளர்களுக்கு அப்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சென்று, அவர்களின் உண்மை நிலை மற்றும் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார்.

0 Responses to பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்கும் திட்டம் இந்தியக்குழுவிடம் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com