Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த அரசைப் பாதுகாக்கவே இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது.

ஜெனீவாத் தீர்மானத்தில் எதிராக வாக்களித்தமையினால் கோபமுற்றுள்ள மகிந்த அரசாங்கத்தை ஆற்றுப்படுத்தவும் பாதுகாக்கவும்தான் இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்துள்ளது என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களை மென்மேலும் எவ்வாறு அடக்கி ஆள வேண்டும் என்பது குறித்து அந்தக்குழுவுடன் அரசாங்கம் ஆராயும் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்துள்ள நிலையில், கருணரட்ண இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரித்தது. அதன் காரணமாக ஆத்திரமடைந்துள்ள மகிந்த அரசாங்கத்தை ஆசுவாசப்படுத்தவே இக்குழு வருகை தந்துள்ளது. அதன்மூலம் வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் காணிகளை கொள்ளையடிப்பதே இக்குழுவின் திட்டம்.

தமிழ் மக்களை வாழ வைப்பதற்கு அல்ல அம்மக்களை அடக்கியாள்வதே இவ் விஜயத்தின் இலக்காகும். மகிந்த அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதால் இந்தியாவிற்கு பாரிய நட்டம் ஏற்படும். இதனால் மகிந்தவை ஆற்றுப்படுத்துவதுடன் மகிந்த அரசிற்கு நற்பெயரைச் சூட்டி சர்வதேச ரீதியில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினராகவே இக் குழு இலங்கை வந்துள்ளது. என்றார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை பாதுகாக்கும் இந்தியக் குழுவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரதிநிதி வாபஸ் பெறப்பட்டமை வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to மகிந்தவை காக்க வந்துள்ள இந்திய உளவுப்பிரிவுதான் இவர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com