Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் தமிழ் பேசும் மக்களுக்குத் தனிநாடு அமைப்பதற்காகப் போராடிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதற்காக முதலில் தமிழ் நாட்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முதலில் தமிழகத்தில் அதைச் செய்துவிட்டுப் பின்னர் தமிழீழம் பற்றி அவர் பேசட்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் தனி ஈழம் அமைப்பதற்கான வாக்கெடுப்பை ஐ.நாவில் நடத்துவது தொடர்பான யோசனைக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளமை குறித்துக் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சம்பிக்க இவ்வாறு கூறினார்.

இலங்கையில் தமிழீழத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி காஷ்மீரிலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு புதுடில்லி அரசைக ருணாநிதி கோர வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 Responses to தமிழீழ வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழகத்தில் நடத்துங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com