Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்கோட்டை தொகுதி சிபிஐ எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவரும், புதுக்கோட்டை நகரமன்ற தலைவருமான கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 32 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளைக்கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல்கட்ட தேர்தல் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவார்கள் என்ற பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் மாநிலக்குழுவை கூட்டி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து தோழர்களையும் தொகுதி மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

இந்த நிலையில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்யிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் கலைஞர், மே-17ம் தேதி முடிவுகளை அறிவிப்போம் என்றார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை (30.4.2012) மாலை 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரிய ன்ணன்.அரசு, மாஜி அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சியின் நிர்வாகிகளை அவசர ஆலோச னைக்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையின் முடிவில், ஜனநாயகத்திற்கு எதிராக நடக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்று திமுக முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

செம்பருத்தி

0 Responses to புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கிறதா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com