ஒரு டன் எடை கொண்ட அணுவாயுதங்களைச் சுமந்து கொண்டு சுமார் 5000 Km தூரம் வரை பயணித்து இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி - 5 ஏவுகணைப் பரிசொதனையை கடந்த வாரம் இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. இதையடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர் இப் பரிசோதனைக்குப் பதிலடியாக நாங்களும் மேற் கொள்வோம் என அறிவித்திருந்தது. இதையடுத்து ஹாட்ப் - 4 எனப் பெயரிடப்பட்ட புதிய ஏவுகணையின் பரிசோதனையை இந்து சமுத்திரத்தின் சர்வதேச கடல் எல்லையில் இலக்கை சென்று தாக்கும் விதத்தில் இன்று பாகிஸ்தான் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
ஷஹீன் - 1A ஆயுத ரகத்தைச் சேர்ந்த இந்த ஏவுகணை 750 Km தூரம் வரை அணுவாயுதங்களைத் தாங்கிக் கொண்டு பயணித்து குறித்த இலக்கைத் தாக்க வல்லது. இந்தியாவும் பாகிஸ்தானும் அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பரிசோதிப்பது தொடர்பாக 2005 மேமாதம் கைச்சாட்டிருந்த ஒப்பந்தப் படி இரு நாடுகளுமே தாம் ஏவுகணைப் பரிசோதனைகளை இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ள முன்னர் தமக்கிடையே இவ் விடயம் தொடர்பாக பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டன.
பாகிஸ்தானின் இராஜ தந்திர நகர்வுகளுக்கு பொறுப்பான பொதுச் செயலாளர் காலிட் அஹ்மட் பாகிஸ்தானின் ஏவுகணைப் பரிசோதனையை நேரில் பார்த்ததுடன் ஷஹீன் - 1A ரக ஆயுதங்களும் ஏவுகணைகளும் பாகிஸ்தானின் பல்வேறுபட்ட ஆற்றல்களை பலப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் வருகின்றன என்றும் மீடியாக்களுக்குத் தெரிவித்துள்ளார். ஷஹீன் ரக ஏவுகணைகள் அனைத்தும் அண்ணளவாக 700 Km வீச்சம் உடையன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பரிசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உம் பிரதமர் கிலானியும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.



0 Responses to இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணைப் பரிசோதனை!