இந்தியா தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியை ஈழத்து எம்.ஜி.ஆர். என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய எம்.பி. சுதர்சன நாச்ச்சியப்பன்.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரிக்கு வந்தனர்.
இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
சுதர்சன நாச்சியப்பன் பெயர் சூட்டலின்படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் போலும் என அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டி ருந்ததைக் காணமுடிந்தது.
எம்.ஜி.ஆரை ஈழமக்கள் போற்றிவருகின்றனர். இந் நிலையில், எந்தவகையில் டக்ளஸ் தேவானந்தா ஈழத்து எம்.ஜி.ஆர். ஆவார் என கொந்தளித்துள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.
ஈழத்து எம்.ஜி.ஆர். டக்ளஸ் தேவானந்தா : காங். எம்.பி. எழுப்பிய சர்ச்சை
பதிந்தவர்:
தம்பியன்
19 April 2012



நக்கித்திரியும் நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன, அது நரகலையும் நக்கும் அதே வாயால்
சிவலிங்கத்தையும் நக்கும் , அந்த வகையைச் சேர்ந்த எச்சில் இலை நக்கும் ஈனப்பிறவிதான்
நாச்சியப்பன். கும்பலாகப் புறப்பட்டு இலங்கைக்குப் போனதின் நோக்கமே விருந்து சாப்பிட்டு
மகிழ்வதற்காக. ஓசியில் சாப்பாடு போட்ட டக்ளசை மகிழ்ச்சி படுத்துவதற்காக நாச்சியப்பன்
உதிர்த்த வாயூறி வழியும் எச்சில் வார்த்தைகள் அவை. ஒரு ஈனப்பிறவியை இன்னொரு ஈனப்பிறவியால்
தான் போற்றிப் புகழமுடியும். ஜெர்மனியில் நாஜிப் படைகள் யூதர்களை கொன்று குவித்தது போல்
சோனியா காந்தியும் , மகிந்த ராஜபக்சாவும் ஈழத்தில் தமிழினத்தைக் கொன்று குவித்தார்கள்.
சோனியா , மஹிந்த , டக்லஸ் போன்ற கேவலங்களை போற்றிப் பாடும் நாச்சியப்பன் ஒரு நாஜியப்பன்.