தமிழரின் சரித்திரத்திலே மறக்க முடியாத துன்பங்கள் நிறைந்த ஓர் முக்கியமான நாள். சர்வதேச ரீதியிலே ஆண்டு தோறும் நினைவு கூற வேண்டிய வாரத்தின் முடிவு நாள்.
30 வருடப் போரிலே அழிக்கப் பட்ட அல்லது அழியப்பட்ட எம் உறவுகளை விட பல மடங்கு தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட இறுதி நாட்கள். 40இ000 எம் உறவுகள் கொல்லப் பட்டதாகவும்147,000௦௦ எம்மவர் காணமல் போனதாகவும் உலகத்தின் கண்பார்வைக்கு நிருபிக்கப் பட்ட வேதானை மிக்க நாட்கள்.
சிங்கள பேரினவாத அரசால்இ உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சரமாரியாக பொழிந்த நாட்களைஇ இரசாயன குண்டுகளை ஈன இரக்கம் இன்றி எறிந்த நாட்களைஇ அதிலும் மேலாகபதுங்கு குழிகளில் மறைத்து இருந்த சிறுவர்களையும் பெண்களையும் மண்ணால் மூடி மடித்த நாட்களை எடுத்துக் காட்டும் விதத்தில்தான் இந்த மே 18 அமைகிறது.
தேசியத் தலைவரின் இலட்சிப் பாதையில் செவ்வனே செயற்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிந்தனையாளர்களாலும் உணர்வு மிக்க பிரதிநிதிகளாலும் பிரகடனப்படுத்தப்பட்ட பெயர் தான் தமிழீழ தேசிய துக்க நாள்.
அதாவது இதை ஆங்கிலத்தில் கூறப் போனால் National day of Mourning.
இந்தப் பெயரின் பொருத்தத்தை அல்லது அதன் அர்த்தத்தை புரியாதவர்கள் மே 18 ஆம் நாளை விளக்கும் போதுதேசியம் அகற்றப்பட்ட நாள் தலைமை அழிக்கப்பட்ட நாள் என்று கூறும் பித்தலாட்டக் காரர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.
தவறிக் கூட வானம் மண்ணில் விழுந்தது இல்லையே. அது போலவே எம் தேசியத்தையோ தலைமையையோ அழக்க யாராலும் முடியாதுஎன்பதை ஆணித்தரமாக கூற விரும்புகிறேன்.
எங்கள்தேசியத் தலைவரின் யுக்தியை தெரியாதவர்கள் அவரின் செயற் திறனைப் புரியாதவர்கள் இனியாவது இதனைப் புரிந்து கொண்டு எம் மக்களை குழப்பும் பேச்சுகளை நிறுத்தாவிடில் எம்மவர் சீற்றத்துக்கு உள்ளாவது நிச்சியம் என்பதையும் இங்கு நான் கூற விரும்புகிறேன்.
போர் குற்றங்களையும் மனித உரிமை மீறல் களையும் உலகம் கண்டிராத வகையில் புரிந்த சிங்கள பேரினவாத அரசுக்கு பயத்தையும் தண்டனையையும் தரும் வகையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி உலகளாவிய ரீதியில் இந்த துன்பம் நிறைந்த நாட்களை நினைவு கூருவோமாக.
நன்றி,
Dr. Ram Sivalingam.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
உதவிப் பிரதமர்.
sivalingham@sympatico.ca



0 Responses to மே 18 | தமிழீழ தேசிய துக்க நாள்