Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே இலங்கை பழி தீர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக இலங்கை வாக்களித்துள்ளது. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார்.

ஐ.நா. பொதுச்சபையில் அண்மையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடை பெற்றிருந்தது. இதன் போது இந்தியா நிறுத்திய நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு எதிராக இலங்கை வாக்களித்துள்ளது. பிலிப்பைன்ஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கே இலங்கை ஆதரவளித்துள்ளது.

இதுதொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மறுத்துவிட்டார். இரகசிய வாக்களிப்பே நடத்தப்பட்டது என்பதால் இலங்கை யாருக்கு வாக்களித்தது என்பது குறித்து எதுவும் பேசமுடியாது என்று அவர் கூறினார்.

இந்த வாக்கெடுப்பின் போது இந்தியாவின் சார்பில் நிறுத்தப்பட்ட நீதிபதி தல்வீர் பண்டாரி தோற்கடிக்கப் பட்டார். இலங்கை ஆதரித்த 84 வயதான பிலிப்பைன்ஸ் நீதிபதி புளோரன்ரினோ பொலிசியானோ அனைத்துலக நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு ஆதரவாக அந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் வாக்களித்தது.

ஐ.நா. முதன்மையான நீதிமன்ற அமைப்பான நீதிக்கான அனைத்துலக நீதிமன்றம் 1946ஆம் ஆண்டு ஐ.நா.சாச னப்படி உருவாக்கப்பட்டது. 15 நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றம் அனைத்துலகச் சட்டங்கள், நாடுகளால் சமர்ப்பிக்கப்படும் சட்டப்பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகள், ஐ.நா. அமைப்புகள் மற்றும் சிறப்பு முகவரகங்கள் தொடர்பான சட்ட ஆலோசனைகளையும் வழங்கிவருகிறது.

0 Responses to ஐ.நாவில் இந்தியாவை பழி தீர்த்தது இலங்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com