நித்தியானந்தாவின் ஆட்கள் மற்றும் அவருடைய உதவியாளர் உள்பட சிலர் தன்னை மடத்தை விட்டு வெளியேற சொல்லி அடித்து காயப்படுத்தி, தனி அறையில் பூட்டி விட்டனர் என்று மதுரை போலீசுக்கும், ஆதின முன்னாள் உதவியாளர் ராமராஜீக்கும், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத்துக்கும் தனது செல்போன் மூலம் கதறியபடி கூறியுள்ளார் வைஷ்ணவி.
இதையடுத்து ஆதின மடத்தின் இரண்டு பக்க கதவுகளை மூடிவிட்டு போலீசார் சோதனை நடத்தினர்.
வைஷ்ணவிரி போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு நித்தியானந்தாவும், ஆதினம் அருணகிரிநாதரும் அவசர அவசரமாக திரும்பினர். அவர்கள் தொடர்ந்து வைஷ்ணவியை சமாதானப்படுத்தி வருகின்றனர்.
போலீசுக்கு தகவல் சொன்ன வைஷ்ணவி! சமாதானம் செய்யும் நித்தி | ஆதினம் அருணகிரிநாதர்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
06 May 2012



0 Responses to போலீசுக்கு தகவல் சொன்ன வைஷ்ணவி! சமாதானம் செய்யும் நித்தி | ஆதினம் அருணகிரிநாதர்!