Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்கொரியாவில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒன்பதுபேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் ஒரு தொடர் மாடிக் கட்டிடமே புகையில் மறைந்தது.

மூன்றாவது மாடி வரை தீ பரவியது..

இறந்த ஒன்பது பேரில் மூன்று பேர் சிறீலங்கா பிரஜைகள்.

இவர்கள் சிங்களவரா – தமிழரா என்பது தெரியவில்லை.

தென்கொரிய பூசான் நரத்தில் இந்த விபத்து நடந்தது.

சுமார் 100 தீயணைப்புப் படையினர் 35 பேரை காப்பாற்ற படாதபாடு பட்டார்கள்.

இது போல..

பெரு நாட்டில் பரவிய தீயில் 14 பேர் பரிதாப மரணமடைந்துள்ளனர்.

போதைவஸ்த்து பாவித்து சிகிச்சை பெற்று வந்தவர்களே இந்த கட்டிடத்தில் இருந்துள்ளனர்.

இருந்த கட்டிடம் பூட்டப்பட்ட நிலையில் தீப்பிடித்துள்ளது.

தப்பி வெளியே வர முடியாத நிலையில் இவர்கள் அலறித் துடித்து மரணித்தார்கள்.

இவர்களை பூட்டி வைத்துவிட்டு யாராவது தீ வைத்தார்களா..? இது சந்தேகம்.

இப்படி…

தீ பரவியதில் மர்மம் நீடிப்பதால் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மறுபுறம்…

டென்மார்க்கை சேர்ந்த 16 வயதுடைய மதில்டா ஜென்சன் என்ற யுவதி அமெரிக்காவில் விபத்தில் சிக்கி மரணித்தார்.

இவர் வர்த்தகக் கல்வி கற்க அமெரிக்கா போன மாணவியாகும்.

தனது அமெரிக்கத் தோழியுடன் காரில் போகும்போது பாரவண்டியுடன் மோதி மரணித்துள்ளார்.

வீதிக்குள் புகுந்த இவர்களுடைய காருடன் மோதுவதை தவிர்ப்பதற்குரிய இடைவெளி இருக்கவில்லை.

கடும் பிறேக் போட்டும் பாரவண்டியை நிறுத்த முடியவில்லை.

டேனிஸ் மாணவியுடன் போன 17 வயது அமெரிக்க மாணவியும் பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அமெரிக்க ஒகியோவில் நடந்துள்ளது.

அலைகள்

0 Responses to தென் கெரிய நெருப்பில் மூன்று சிறீலங்கன் மரணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com