திருமலை நடராசன் என்றால் யார் என்பதை இன்றைய கூட்டமைப்பினர் மறந்திருக்கக்கூடும்.
அவன்தான் அன்று திருமலையின் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை அறுத்து வீழ்த்தியவன்.
இராணுவம் சுடப்போவதாக விடுத்த எச்சரிக்கையையும் மீறி அறுத்து வீழ்த்தினான். சிங்கள பௌத்த இனவாத இராணுவம் சுட்டதில் அந்தக் கொடியோடு மரணித்தான்.
என் மண்ணில் என் இனத்தை மதிக்காத இனவாத சிங்கக் கொடி பறப்பதைவிட மரணமே பெரிதென்று மடிந்தான்.
இந்த நடராசனை வைத்துத்தான் தமிழரசுக் கட்சியும் பின் தமிழர் கூட்டமைப்பும் அரசியல் பிழைப்பு நடாத்தி வந்தன.
மேடைக்கு மேடை தியாகி நடராஜனை பேசி இன உணர்ச்சியை தூண்டி அரசியல் செய்தனர்.
பின் அதே அமிர்தலிங்கம் சிங்கள பௌத்த இனவாத பாராளுமன்றத்தின் சத்தியப்பிரமாண வாசகங்களை உச்சரித்து சத்தியப்பிரமாணம் செய்து எதிர்க்கட்சித் தலைவரானார்.
பின்னர் கூட்டணி தலைமைதாங்கிய நகரசபைகளில் அதன் முதல்வர்கள் சிங்கக் கொடியை ஏற்றினார்கள்.
அரசியல் வானில் கூட்டணி என்ற நட்சத்திரம் உதிர்ந்து கீழே விழ காரணமாக அமைந்தது அன்று அவர்கள் ஏற்றிய சிங்கக் கொடிகள்தான்.
இது வரலாறு -
இப்போது மறுபடியும் யாழ். மேதினத்தில் சம்மந்தர் சிங்கக் கொடியை பிடித்துள்ளார்.
அவர் தானாக பிடிக்கவில்லை ரணில் அவருடைய கையில் திணித்துவிட்டார் என்று ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் கூறுகிறார்.
சிங்கக் கொடி பிடித்தது மக்கள் மனதை புண்படுத்திவிட்டது மன்னித்துவிடுங்கள் என்கிறார் இன்னொரு கூட்டமைப்பு பா.உ
எதிரிகள் கூட்டமைப்பை பிரிக்க முயல்கிறார்கள் என்கிறார்கள் தற்போது கூட்டமைப்பினர்.
எதிரிகள் ஏன் பிளக்க வேண்டும்.
சிங்கக் கொடி ஏந்திய விவகாரத்தில் கூட்டமைப்பு மூன்று கருத்துக்களை உதிர்த்துள்ளது. தானாக பிளவுபடும் ஓர் அமைப்பை மற்றவர் பிளவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
குறைந்த பட்சம் சம்மந்தர் கொடி பிடித்ததற்கு இரண்டு தினங்கள் பர்மாவில் நடந்ததையாவது அறிந்து நடந்திருக்க வேண்டும்.
பர்மீய ஜனநாயக தலைவர் அவுங் சாங் சுகி அம்மையார் இராணுவ சர்வாதிகார ஜிந்தாக்கள் புகழ் பாடும் சத்தியப் பிரமாணத்தை செய்ய முடியாதென கூறி பாராளுமன்றத்திற்கு போக மறுத்தார்.
இப்போது ஆட்சியாளர் படிந்து வரவே சத்தியப்பிரமாணம் செய்யாமலே பாராளுமன்றம் போயுள்ளார்.
அன்று அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் விட்ட தவறை இன்று அவர் செய்யவில்லை.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தியாகராசா போல இரா. சம்மந்தர் வட்டுக்கோட்டை எம்.பி அல்ல.
சிங்கக் கொடியை அறுத்து வீழ்த்திய தியாகி நடராஜன் இரத்தம் சிந்திய திருமலை மண்ணில் இருந்து தேர்வானவர்.
அவர் தனது சொந்தப் புத்தியை எங்கே – யாரிடம் அடகு வைத்துவிட்டு யாழ் வந்தார்..?
ரணில் கையில் திணித்தால் சிங்கக் கொடியை ஏற்று ஆட்ட சம்மந்தர் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா..?
அன்று பதவி – பண ஆசையில் மு.கருணாநிதி விட்டது போன்ற மடைத்தனமான தவறுகளை அரசியல் பிழைப்புக்காக விடலாம்… அது தமிழ் நாட்டில்… மானமுள்ள வீரர்கள் பிறந்த ஈழ மண்ணில் நின்று நாம் செய்யலாமா..?
புலிகளின் படுகொலை லிஸ்டில் சம்மந்தர் இரண்டாவது இடத்தில் இருந்தார் என்று பசில் ராஜபக்ஷ சொன்னதை இன்றுவரை சம்மந்தர் மறுக்கவில்லை.. அவருடைய மௌனம் சம்மதத்தையே குறிக்கிறது.
சிங்கக் கொடி விவகாரத்திலும் அவர் மௌனம் காப்பதும் மாவை மன்னிப்பு கோருவதும் மரபல்ல..
கூட்டமைப்பு சிந்தித்து தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
அலைகள்



THE leader of TNA(Mr.Sampnthan)is not only a fool but also a traitor.