இன்று ஞாயிறு பிரான்சிய அதிபர் தேர்தல் நடைபெறுகிறது, வாக்களிப்புக்கள் ஆரம்பித்துவிட்டன.
அதிகாலை 08.00 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்புக்கள் மாலை 18.00 மணி வரை நடைபெறும்.
பிரான்சிய அதிபர் ஸார்கோஸியை எதிர்த்து சோசலிச வேட்பாளர் பிரான்சியோ கொலன்ட போட்டியிடுகிறார்.
கருத்துக் கணிப்பில் முன்னர் எட்டு வீதம் முன்னணி வகித்த கொலன்ட இப்போது நான்கு வீதமே முன்னணி வகிக்கிறார்.
கடும்போக்கு வலதுசாரிகள் ஸார்கோஸிக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்த காரணத்தால் அவருடைய செல்வாக்கு சிறிது உயர்ந்துள்ளது.
ஆனால்..
இந்தத் தேர்தலில் கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக அதிரடியாக எதுவும் நடக்காது என்று இன்றைய காலை பிரான்சிய பத்திரிகைகள் கூறுகின்றன.
இதனுடைய கருத்து ஸார்கோஸி தோல்வியடையப் போகிறார் என்பதுதான்.
மொத்தம் 46 மில்லியன் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளார்கள்.
உலகப் பொருளாதார நெருக்கடியில் மாட்டுப்பட்டுள்ள பிரான்சை யாரால் மீட்க முடியும் என்ற கேள்விக்கான பதிலே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும்.
ஸார்கோஸி தன் முன் விழுந்த சவால்களை வெற்றிபெறத் தவறிவிட்டார்.
மேலும்…
வலதுசாhகளின் நீண்டகால ஆட்சியால் பிரான்சிய மக்கள் களைத்துவிட்டார்கள்.
எனவே புதியவர் ஆட்சிக்கு வரப்போகிறார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் கொலன்ட நாலு வீதம் முன்னணி வகிக்கிறார்.
கொலன்டவின் பொருளாதார கொள்கைகள் மக்களுக்கு விளங்காத சிதம்பர சக்கரமாக இருப்பதாக ஸார்கோஸி கூறுகிறார்.
அதேவேளை தேர்தல் முடிவுகள் எதிர் பார்த்ததைவிட ஸார்கோஸிக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்தத் தேர்தலால் பல்லக்கில் இருந்தவர் மாறுகிறார்… மற்றப்படி பிரான்சிய மக்களின் சுமை மாறப்போவதில்லை.
அலைகள்



0 Responses to இன்று பிரான்சிய அதிபர் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்