ஐ.நாவின் சிரிய அமைதித் திட்டம் சிறிய வெற்றி பெற்றுள்ளது.
இன்று சிரிய சர்வாதிகாரி ஆஸாட் 265 அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.
கடந்த நவம்பரில் இருந்து 4000 பேரை விடுவித்துள்ளதாக தெரிவிக்கிறது சிரிய அரசு.
ஐ.நாவின் பிரதிநிதி கொபி அனான் முன் வைத்த தீர்வுத்திட்டத்திற்கு அமைவாக இவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
அதுபோல மக்கள் வாழும் நகரங்களில் இருந்து சிரிய இராணுவத்தின் படுகொலை கவச வாகனங்களும் மெல்ல விலகி வருகின்றன.
இராணுவத்தில் இருந்து விலகியவர்களை பிடித்து இரகசியமாக தூக்கில் போட்டு வருகிறார் சிரிய சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டு இன்னமும் முடிவடையவில்லை.
மறுபுறம்..
முன்னாள் அதிபரை நயவஞ்சகமாக சிறை வைத்திருக்கும் உக்ரேனுக்கு எதிராக ஐரோப்பா திரண்டு வருகிறது.
இந்த நாட்டின் அதிபராக இருந்த இளம் அழகியான யூலியா ரிமோயெஸ்கோவை தற்போதைய அதிபர் சிறையில் போட்டுள்ளார்.
போலியான ஊழல் குற்றச்சாட்டு போட்டு ஏழு வருடங்கள் சிறையில் தள்ளியுள்ளார்.
சிறைக் கொட்டடியில் இந்த பெண்மணியை அடித்து துன்புறுத்தி வருகிறார்கள் காவலர்கள்.
இதனால் இவர் உண்ணாவிரதமிருப்பது தெரிந்ததே.
இதற்கு சரியான பதிலடி கொடுக்க ஐரோப்பா தயாராகி வருகிறது..
வரும் கோடையில் நடைபெறவுள்ள ஐரோப்பா கிண்ணம் 2012 உதை பந்தாட்டம் உக்ரேனிலும் – போலந்திலும் நடைபெறவுள்ளது.
இறுதியாட்டம் உக்ரேனில் நடக்கவுள்ளது.
இன்று அதிகாலை செய்திகளின்படி..
நாட்டின் பழைய தலைவரை மதிக்காத உக்ரேனில் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தை நடாத்தக் கூடாது என்று போலந்து எதிர்க்கட்சி தலைவர் கேட்டுள்ளார்.
போட்டியை உக்ரேன் தலைநகர் கிஜேவ்வில் இருந்து போலந்து தலைநகர் வார்சோவிற்கு மாற்றும்படி கேட்டுள்ளார்.
பழைய தலைவரை சிறையில் இருந்து விடுவிக்காவிட்டால் டென்மார்க் – ஜேர்மனி போன்ற நாடுகள் உக்ரேன் போட்டியை தவிர்க்க வாய்ப்புள்ளது.
சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது குண்டு வீச்சுக்களை நடாத்த உதவிய நாசகார உக்ரேனின் முகமூடி கிழிந்து வருவதால் தமிழ் மக்கள் மகிழ்வடைந்துள்ளனர்.
சிறீலங்கா இனவாதத்திற்கு துணை போன உலகத் தீயவர்கள் அத்தனை பேரும் படிப்படியாக தோல்வியடைந்து வருகிறார்கள்.
உண்மை உடன் வெல்லாவிட்டாலும் மெல்ல மெல்ல வெல்லும்..
அலைகள்



0 Responses to உதைபந்தாட்டத்தால் உதைபடப் போகும் உதவாக்கரை உக்ரேன்