இன்று பிரித்தானியாவின் மத்திய லண்டன் பகுதியில் நடைபெறும் மேதின நிகழ்வுகளில் இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை வெளிக்காட்டும் பரப்புரை பதாகைகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
இலங்கைத் தீவில் 60 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தமிழினப் படுகொலையின் உச்சமாக 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் அவலங்களை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டும் நோக்கத்தோடு இப் பரப்புரை பதாகைகள் அமைந்தன.
குறிப்பாக சனல் 4 தொலைக்காட்சியினால் சர்வதேசத்திற்கு ஆதாரங்களோடு அம்பலப்படுத்தப்பட்ட "Sri Lanka's Killing Fields" எனும் காணொளியை மீண்டும் மீண்டும் சர்வதேசத்தின் கண்களின் முன் கொண்டுவந்து இலங்கைத் தீவில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியுமே இந்த போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நிமலன் அவர்கள் முன்னெடுத்துள்ளார்.
இப்பரப்புரை பதாதைகளை வேற்றின மக்களும் தாங்கி நின்றனர்.
லண்டன் மேதின நிகழ்வுகளில் வேற்றின மக்களின் கவனத்தை ஈர்க்கும் தமிழர்களின் பரப்புரை பதாகைகள்!
பதிந்தவர்:
தம்பியன்
01 May 2012



0 Responses to லண்டன் மேதின நிகழ்வுகளில் வேற்றின மக்களின் கவனத்தை ஈர்க்கும் தமிழர்களின் பரப்புரை பதாகைகள்!