Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிபர் தேர்தலுக்கான 2ஆம் சுற்று வாக்களிப்புக்கு பிரென்சு தேசம் தயாராகி வரும் நிலையில், மே நாள் பேரணிகள் பிரான்சின் முக்கிய நகரிங்களில் பாரியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் மையப்புள்ளியாக விளங்குகின்ற தலைநகர் பரிசில் இடம்பெற்ற பிரமாண்டமான மே நாள் பேரணியின் போது, ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை வலியுறுத்தி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரான்ஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் சமூகத்தின் அமைப்பு, பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் “இலங்கையின் கொலைக்களங்கள்” ஆவணப்பட பிரதிநிதிகளை பல்லின மக்களுக்கும் விநியோகித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

மறுபுறம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக் குழுவினர் துண்டுப்பிரசுர விநியோக பரப்புரையில் இன்னுமொரு முனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதிபர் தேர்தலினை மையப்படுத்தி ஏற்பட்டிருக்கின்ற பரப்பான சூழலில், பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சியினைச் சேர்ந்தவர்கள் நிறைந்து காணப்படுகின்ற இம்முறை மே நாள் பேரணியினை தகுந்த வாய்ப்பாக பயன்படுத்தி, இத்தகைய பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றோம் என நாடு கடந்த அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை,இப்பேரணியில் சிங்கள தேசத்தின் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சோசலிச முன்னணி கட்சியனரும் பங்கெடுத்திருந்தமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

0 Responses to பிரான்சின் மே நாள் பேரணியில் “இலங்கையின் கொலைக்களங்கள்” ஆவணப்பட பிரதிகள் விநியோகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com