Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு துவக்கப்பள்ளியை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார்.

இதன் பின்னர் அவர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, ‘’எம்.எல்.ஏ., தொகுதி எப்படி உள்ளது என்பதை பற்றி அறியவும், மக்கள் எந்தளவு பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை பற்றி அறியவும் தான் இங்கு வந்துள்ளேன். ஓட்டுக்காக நான் வரவில்லை.

தொகுதி நிதியாக வழங்கப்படும் 2 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படவில்லை.

சட்டசபைக்கு விஜயகாந்த் வரவில்லை என கூறுகிறார்கள். சட்டசபைக்கு எதிர்கட்சியாக இருக்கும் போது தி.மு.க., தலைவர் கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபைக்கு வந்துள்ளார்களா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ராமஜெயம் கொலை வழக்கிலும், திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கிலும் இதுவரை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை’’ என கூறினார்.

அப்போது விஜயகாந்திடம், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என பத்திரிகை யாளர்கள் கேட்டதற்கு, ‘’ உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’’என கூறினார்.

0 Responses to புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com