தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கத்தையும் உரிமைகளையும் வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஒரு போதும் விரும்பியதில்லை என நவசமமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான எதிர்கட்சியும் இணைந்த கூட்டு மே தினத்தினை யாழ்ப்பாணத்தில் நடத்தியதாகவும்,
இவ் மேதினத்தைக் குழப்புவதற்கு ஆட்சியிலுள்ளவர்கள் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்ட நிலையில் அவை அனைத்தையும் தகர்த்தெறியப்பட்டு மே தினம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது
15000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இது நாட்டு மக்களுக்கு கிடத்த மாபெரும் வெற்றியாகவே கருத முடியும் இம் மே தினத்தினால் மகிந்த அரசின் மத்தியில் தற்போது அச்சம் குடிகொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உறுதியளிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,மறுபுறம் சிங்கள போரினவாத அமைப்புக்களான சிஹல உறுமய, ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி போன்றவற்றை தூண்டிவிட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்குவதை தடுக்கும் சதித் திட்டத்தையும் மேற்கொண்டு வருவதாகவும்.ஜனாதிபதியின் செயற்பாடுகள் தமிழ் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கே முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாளுக்கு நாள் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்காவினதும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடமிருந்து அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுளார்.



0 Responses to உரிமைகளையும் வழங்குவதற்கு மகிந்த ஒரு போதும் விரும்பியதில்லை