Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்மவீரர் காமராஜரின் 110 வது பிறந்ததினம் இன்றாகும். காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்றைய நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் படுகிறது.

சென்னை திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அவரது பிறந்தநாளை மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

படிக்காத மேதை என்று மக்களால் அழைக்கப்பட்ட காமராஜர் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் கண்டவர்.

ஏழை குழந்தைகள் கட்டாயக் கல்வி பெரும் வகையில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த தலைவர் காமராஜர். காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜி.கே.வாசன், "அனைவருக்கும் கல்வி வேண்டும் என்கிற நோக்கில் கர்மவீரர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். இன்று இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மிகச் செம்மையாக செய்துவருகிறது" என்றார்.

0 Responses to இன்று கர்மவீரர் காமராஜரின் 110 வது பிறந்தநாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com