Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜப்பானின் தென் தீவான கியூஷுவில் நேற்று ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர்.

அப்பகுதியில் திடீரென பெய்த கன மழையினால் இவ்வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து பல நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது வெள்ளப்பெருக்கு, ஜப்பானின் புராதன தலைநகரமான கியொட்டோ மற்றும் ஹொன்ஷு தீவுகளையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் 250,000 மக்களை உடனடியாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பானிய அரசு வலியுறுத்தியுள்ளது. மீட்பு பணிகளில் ஜப்பானின் சுய பாதுகாப்பு படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.

ஃபுகுகோகா சாகா, குமாமோடோ, ஒயிடா, குயோடோ ஆகிய நகர்ப்புறங்களிலிருந்து சுமார் 85,000 பேர் வெளியேறியுள்ளனர்.

0 Responses to ஜப்பானில் கன மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு : 250,000 மக்களை இடம்பெயர உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com