Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர் விஷயத்தில் கருணாநிதி வாயை மூடிக்கொண்டு மௌனமாகவிருந்தால் போதும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று வியாழக்கிழமை ஈரோட்டில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தனி ஈழம் பற்றி தி.மு.க தலைவர் கருணாநிதி கூறுவதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை.

கடந்த 1985 ல் இருந்து கருணாநிதி ஈழம் பற்றி கூறுவதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஈழத்தமிழர் விசயத்தில் அவர் வாயை மூடிக்கொண்டு மௌனமாவிருந்தால் போதும். அங்கு அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

கருணாநிதி எதிர்கட்சியாக இருக்கும் போது ஈழத்தமிழர்கள் பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதை தவறவிடமாட்டார்.

டெசோ மாநாடு நடத்துவதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த வித பயனும் ஏற்பட போவதில்லை. அது பயனற்றதாக தான் முடியும். என்றார்.

0 Responses to ஈழத்தமிழர் விடயத்தில் கருணாநிதி வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும்! பாமக ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com