Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் டென்வார் நகரின் சினிமா திரையரங்கு ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

அண்மையில் திரைக்கு வந்த பேட்மேன் நள்ளிரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிதாரி அருகிலிருந்த கார் பார்க் ஒன்றில் வைத்து, ரிஃபிள், கைத்துப்பாக்கி சகிதம் கைது செய்யப்பட்டான். தனது வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, நோர்த் ஆஃப் ஔரோராவில் உள்ல அவனது குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரையும் உடனடியாக காவற்துறையினர் வெளியேற்றியுள்ளனர். சினிமா திரையரங்கில் நடந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 10 பேரும், மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ள முன்னர் துப்பாக்கித்தாரி கண்ணீர் புகைகுண்டு வீசியதாகவும், கலவர தடுப்பு பொலிஸாரின் தலைக் கவசம், துப்பாக்கி குண்டு நுழையாத கவச அங்கி என்பன அணிந்திருந்ததாகவும் நேரில் பார்த்த சாட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திரையரங்கில் பேட்மேன் காட்சி ஓடிக்கொண்டிருந்த போது, துப்பாக்கி தாரி முதலில் கண்ணீர் புகைகுண்டுக்களை வீசியுள்ளான். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளான். புகை கிளம்பிய போதும், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட போதும், அதிர்ச்சியில்லாமல் இருந்துள்ளார்கள் ரசிகர்கள். படத்தின் பிரமாண்ட காட்சிகளுக்கு நேரடி எஃபெக்ட் கொடுப்பதாக தம்மில் பெரும்பாலானோர் நினைத்துவிட்டதாக மற்றுமொரு நேரடி சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்காவில் பேட்மேன் பிரிமியர் ஷோ திரையரங்கில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com