அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பொறுப்பிலிருந்தும் தூக்கியடிக்கப்பட்ட செங்கோட்டையன் சென்னையிலிருந்து கார் மூலம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் வந்து சேர்ந்தார்.
உறவினர்கள், உள்ளூர் செய்தியாளர்கள், நண்பர்கள், கட்சிகாரர்களிடம், சென்னையிலிருந்த வீட்டை காலிசெய்து வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
கோபியில் உள்ள நல்லமுத்து கம்பன் பொன்விழா குழுவினரால் நடத்தப்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான இராமாயணம் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழா நேற்று மாலை கோபி சீதா திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார். விழாவில் பேசிய செங்கோட்டையன்,
கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நல்லமுத்து கம்பன் அறக்கட்டளை சார்பில் 50-வது ஆண்டு கம்பன் விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கம்பன் பெருமைகளை நான் சொல்ல வேண்டியதில்லை எல்லோருக்கும் தெரியும். ராமாயணத்தில் ராமனுக்கு பல்வேறு சோதனைகள் வந்துள்ளது.
சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது ராமர், அனுமாரை சீதாவிடம் தூதுவனாக அனுப்பி வைத்தார். அப்போது அனுமாரிடம், சீதா, ராமர்தான் அனுப்பி வைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டாள். உடனே அனுமார் ராமன் கொடுத்த கணையாளியை காண்பித்தார். மேலும் அவரது நெஞ்சை பிளந்தார் அதில் ராமர் தெரிந்தார்.
அதேபோல் என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் தெரிவார் (இவ்வாறு அவர் கூறியதும் அவரது கண்களில் கண்ணீர் ததும்பியது). இந்த விழாவுக்கு என்னை அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.



0 Responses to என் நெஞ்சை பிளந்தால் ஜெயலலிதா இருப்பார்! செங்கோட்டையன் கண்ணீர்!