பிரதமர் மன்மோகன் சிங், சரத்பாவாருடன் தொலை பேசியில் பேசியதாகவும், பேச்சுவாரதையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணலாம் என்று அவர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடம் தனக்குத் தரவில்லை என்கிற அதிருப்தியில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், சரத் பவாருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம் என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், சரத் பவார் என் மதிப்புக்குரிய நண்பர், அவரின் அரசியல் அனுபவம், அறிவுத் திறன் அரசுக்கு மிக்க பக்கபலமாக இருந்திருக்கிறது என சராத் பவாரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கமிட்டிக் கூட்டம் இன்று மாலை கூட இருப்பதாகவும், அதில் சரத்பவார் பிரச்சனைப் பற்றியும் பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என்றும் தெரியவருகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரபு பட்டேல், மத்திய அமைச்சரவையில் இரண்டாம் இடத்தை கேட்டுப் பெறவேண்டிய அவசியம் சரத்பவாருக்கு இல்லை. யூகங்கள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எழுப்பிய பிரச்சனைதான் இது என்று கூறியிருக்கிறார்.



0 Responses to சரத்பவாருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை