தமிழகத்திலிருந்து 9 சிறிலங்கா விமானப்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டது, வீரர்களின் பாதுகாப்பு கருதியே தவிர தமிழக எதிர்ப்புக்களுக்கு பயந்து அல்ல என சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புவெகல தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் தனி ஈழப்பிரச்சாரரம் சிறு குழுக்கள் செய்யும் விடயங்கள் எனவும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் வைத்து இவ்வாறு தெரிவித்தார். வருடத்திற்கு சுமார் 1000, 1500 சிறிலங்கா படையினர் இந்தியாவில் பயிற்சிகளை பெறுகின்றனர். இலங்கை படைகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பிரதான பங்குதாரர்களே இந்தியா தான்.
வீரர்களின் பாதுகாப்பு கருதியே சிறிலங்கா வீரர்கள் இம்முறை தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தனி ஈழப்பிரச்சாரத்தை நீக்குமாறு டெசோவிற்கும், கருணாநிதிக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விடயங்களை பெரிது படுத்த தேவையில்லை.
வி.புலிகள் இயக்கத்துக்கான தடையை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது, இந்தியா - இலங்கை இடையிலான உறவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம். இலங்கையின் நட்புறவு நாடு என்ற முறையில் வி.புலிகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வீரர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டது எதிர்ப்புக்கு பயந்து அல்ல: சிறிலங்கா அரசு
பதிந்தவர்:
தம்பியன்
20 July 2012



0 Responses to சிறிலங்கா வீரர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டது எதிர்ப்புக்கு பயந்து அல்ல: சிறிலங்கா அரசு