இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க.தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பான டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கியிருக்கும் தி.மு.க. தலைவர் கலைஞர், ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் பசியைப் போக்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள். அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தரப்படுவதை தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கும்’ என்றார்.



0 Responses to தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்