தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூ.25 கோடி நிதியுதவி ஒதுக்கியுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக குறிப்பாக முகாம் மக்களின் குடிநீர் வசதியை மேம்படுத்தல், வீடுகளை பழுது பார்த்தல், சாலைகளை சீரமைத்தல், நூலக கட்டிடம் கட்டுதல் நியாய விலை கடைகள் அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்தல், சமுதாய கூடங்கள், சமலையறை கட்டுதல், மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக இந்த ரூ25 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒரு வீட்டிற்கு ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் 2,500 நீடித்து நிலைக்க கூடிய புதிய வீடுகளை கட்டுவதற்கும் இத்தொகை செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூ.25 கோடியில் புதிய அபிவிருத்தி பணிகள்: தமிழக அரசு