Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) தேசிய காங்கிரஸ் 18 ஆவது கூட்டத் தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி இன்று புதன்கிழமை நிறைவுற்றது.
இறுதி நாளான இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அமைச்சரவை தெரிவு செய்யப்பட்டது. மேலும் புதிய அதிபர், பிரதமர் ஆகியோர்களின் பெயரும் நாளை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

சீனாவில் ஏற்கனவே கடந்த 10 வருடங்களாக அதிபராகக் கடமையாற்றிய ஹு ஜிந்தாவோ தனது பதவி விலகலை இன்று அறிவித்தார். இவர் அதிபராக மட்டுமன்றி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இராணுவக் குழுவின் பொறுப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து தற்போது சீனாவின் துணை அதிபராக விளங்கும் ஜி ஜின்பிங் அதிபராகத் தெரிவு செய்யப் படுவார் என எதிர்பார்ப்பு நிலவுகின்றது. 59 வயதுடைய இவர் 1974 இல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து உயர் குழுக்களுடன் பணியாற்றி வருகின்றார். பிரதமராக லி கேகுயாங் தெரிவு செய்யப் படலாம் எனவும் கருதப் படுகின்றது.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே இத்தகைய புதிய அமைச்சரவை மாற்றங்கள் தற்போது அறிவிக்கப் பட்டாலும் அடுத்த வருட தொடக்கத்தில் தான் பதவியேற்பு இடம்பெறும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் நிலவிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு பெருமளவு இருந்த போதும் சராசரி சீன குடிமகனின் வருவாய் ஹு ஜிந்தாவோ இன் ஆட்சியில் தான் பல மடங்கு அதிகரித்துள்ளது

அதாவது சராசரி சீனக் குடிமகனின் வருவாய் 931 அமெரிக்க டாலராக இருந்தது இவரது ஆட்சியில் 3461 டாலர்களாக அதிகரித்துள்ளது.

0 Responses to சீனாவில் புதிய அதிபர் மற்றும் அமைச்சரவை தேர்வு : அதிபராகவுள்ளார் ஜி ஜின்பிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com