ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ள அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென கனடா அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம், மனித உரிமைப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதமர் ஸ்டீவன் ஹார்பரும், தாமும் கேள்வி எழுப்ப உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் பயார்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஐ.நா உள்ளக அறிக்கை பகிரங்க வெளியீடு : கனடா வரவேற்பு