Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித்துக்கள் வசிக்கும் பகுதி ஒன்றுக்கு மியான்மார் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
சனிக்கிழமை அங்கு அவர் மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர் அவரைக் கௌரவிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

முன்னர் 'பப்பசனிப்பல்லி' என்று அழைக்கப் பட்ட இக் கிராமமே உள்ளூர் அதிகாரிகளால் ஆங் சான் சூகி காலனி எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மேலும் நோபல் பரிசு கிடைக்கப் பெற்ற பெண்மணியான ஆங் சான் சூகி அங்கு விஜயம் செய்த போது அவரது பெயருடன் கூடிய பெயர் மாற்றம் செய்யப் பட்ட ஊரின் மிகப் பெரிய பேனர்களுடனும் ஆரவாரமாக கிராம மக்கள் வரவேற்றனர்.

இப்படியான கௌரவம் கிடைக்கப் பெற்ற சூகி கிராம மக்கள் முன்னிலயில் பேசுகையில் 'எனது பெயரின் அர்த்தம் மிகவும் வித்தியாசமான வெற்றிகளின் கூட்டம் என்பதாகும். எனவே இப் பெயர் மாற்றம் செய்யப் பட்ட கிராமமும் பல எதிர்பார்க்காத வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். வெற்றி என்பது தன் போக்கில் எவரிடமும் வருவதில்லை. நீங்கள் அனைவரும் அதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்' என்று உரைத்தார்.

சூகி இன் உரையை ஆந்திரப் பிரதேசத்தின் வருமானத்துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி தெலுங்கில் மொழி பெயர்த்தார். இதன் போது அவர் கிராம மக்களை சூகியின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனக் கூறினார். மேலும் சூகி தனது நாட்டில் ஜனநாயகம் மலர்வதற்காகவே 25 வருடங்கள் சிறையில் வாடினார் எனவும், இது மிகப் பெரிய தியாகம் என்றும் இவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆந்திர கிராமம் ஒன்றின் பகுதிக்கு 'ஆங் சான் சூகி காலனி' எனப் பெயர் மாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com