கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலை கழிவுகள்
சேமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அப்பிரதேச மக்கள் இதற்கு
கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நரிமன் ஆஜராகியிருந்தார். அப்போது அவர், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டன. அவற்றில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பதிலளித்தார்.
இதையடுத்து இத்தகவல் காட்டுத்தீ போல் அம்மக்களை சென்றடைய, அச்சமடைந்த அவர்கள், தமிழகத்திலிருந்து அணு கழிவுகளை கர்நாடகம் கொண்டுவர அனுமதிக்க கூடாது என தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் கோலார் தங்கவயலில் நாளை முழு அடைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், சுரங்க தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோலார் தங்கவயலில் கூடங்குளம் அணுக்கழிவுகளை சேமிக்க கர்நாடகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பில் தமிழகம் - கர்நாடகத்திற்கு இடையே பிரச்சினை இருக்கையில், தற்போது புதிதாய் இப்பிரச்சினை வந்து சேர்ந்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனித உரிமைசெயற்பாட்டாளர்கள், போராட்ட குழுவினரின் கடும் பிரச்சார போராட்டங்களால் ஏற்கனவே மத்திய, மாநில அரசுக்கள் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் தற்போது மற்றுமொரு சிக்கல் இவ்வாறு உருவாகியுள்ளது.

0 Responses to கூடங்குளம் அணுவுலை கழிவுகளை கர்நாடகாவில் சேமிப்பதா? : வலுப்பெறும் புதிய எதிர்ப்பு