Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேணல் பரிதி அண்ணாவின் இழப்பு தமிழ் இனத்திற்கு மீண்டும் ஓர்  பேரிடியாக வீழ்ந்திருக்கின்றது. முள்ளிவாய்க்காலில்   ஆயிரக்கணக்கான மக்களையும்போராளிகளையும் இழந்த எமக்கு புலம்பெயர் மண்ணில் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இலக்கு தவறாமல் உறுதி தளராமல் எம்மையும் ஊக்குவித்து செயற்படுகிற பரிதி அண்ணா  போன்றோரை இழப்பது எம்மால் ஜீரணிக்க முடியாது.

தாயகத்தில் எம் இனத்தினை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசாங்கம் இப்பொழுது சர்வதேசத்திலும் தன் கொடூரங்களை ஆரம்பித்துள்ளது. ஜனநாயக வழியில் எம் போராட்டத்தை முன்னெடுத்து வருவோர் மீது சிங்கள அரசாங்கம் தன் இனவெறி யுத்தத்தை சர்வதேசத்திலும் ஆரம்பித்துள்ளது.

இப்படிப் பட்ட சம்பவங்கள் எம்மை மீளாத்துயறத்தில் ஆழ்த்தினாலும் சிங்கள அரசாங்கம் எண்ணுவது போல் எம்மையும் எங்கள் விடுதலை தாகத்தையும் நசுக்கி விட முடியாது. எமது மனதில் இவரின் இழப்பு மற்றும் எமது மாவீரர்களின் தியாகமும் வீண்போகக்கூடாது என்ற எண்ணம் அனலாய் எரிகின்றன.

கேணல் பரிதி அண்ணாவிற்கு வீரவணக்கத்தைத்  தெரிவித்துக்கொண்டு இத்தருணத்தில் இவரை இழந்து தவிக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரின் பணியில் தேசியத்தலைவரின் வழியில் தமிழீழம் என்ற இலட்சியத்திர்க்காய் தொடர்ந்தும் பாடுபடுவோமென இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய நாம் உறுதியெடுக்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்




தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

0 Responses to வீரவணக்க அறிக்கை - தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com