Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைக்காக தாயகமண்ணில் ஆரம்பித்த பணியை கடல் கடந்தும் புலம்பெயர் தேசத்திலும் தன்னை அர்ப்பணித்து தலைவனின் வழியில் களமாடிய மாவீரன் கேணல்.பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள அரசின் கைக்கூலிகளால் பிரான்ஸ் நாட்டில் சுடப்பட்டு வீரச்சாவை தழுவியுள்ளார்.

'எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமே கவலை கொள்ளலாம், கண்டனங்களை தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம்;, ஆயினும் எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது' எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக எமது விடுதலைப் போராட்டத்திற்;;கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம்.

முள்ளிவாய்க்காலுக்கு பின் போராட்டமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடாது போராடிய மாவீரன் பரிதியின் படுகொலை மூலம் இன்னும் போர் முடியவில்லையென்று சிங்கள இனவாத அரசு சர்வதேச தமிழினத்திற்கு    எச்சரிக்கை விட்டுள்ளது.

தாயகத்தில் எம் இனத்தினை கொடூரமாக கொன்று குவித்த சிங்களம் தற்பொழுது சர்வதேசத்திலும் தன் கொடூரங்களை ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசத்தில சனநாயக வழியில் எம் போராட்டத்தை முன்னெடுத்து வருவோர் மீது சிங்கள அரசாங்கம் தன் இனவெறி யுத்தத்தை சர்வதேசத்தில் ஆரம்பித்துள்ளது.

இச் சம்பவமானது எம்மை கவலைக்குள்ளாக்கியதுடன் எம் மனதில் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணம் வீண்போகாது என்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் சபதம் எடுப்பதுடன் அவரின் பணியினை தலைவனின் வழியில் தமிழீழம் எனும் தாகம் அடைந்திட தொடர்ந்து நாம் பாடுபடுவோம் என உறுதியெடுக்கின்றோம்.

இத் தருணத்தில் இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், எம்மைப் போன்ற செயற்பாட்டாளர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

'தாயகம் காணும் வரை ஒன்றிணைந்து களமாடிடுவோம் இளையோரே வாரீர்'


                                                  சுவிஸ் இளையோர் அமைப்பு.

0 Responses to 'தாயகம் காணும் வரை ஒன்றிணைந்து களமாடிடுவோம் இளையோரே வாரீர்' - சுவிஸ் இளையோர் அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com