இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித
உரிமை மீறல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாவிடின் பொதுநலவாய
மாநாட்டை கனேடிய அரசாங்கம் புறக்கணிக்க வேண்டும் என புதிய ஜனநாயகக்
கட்சியின் ஸ்காபுரோ ருச்ரிவர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரியவருவதாகவும்.அந்நாட்டு அரசானது சுதந்திரமானதும் பாரபட்சம் அற்றதுமான சர்வதேச மனித உரிமை மீறல் விசாரணையை முன்னெடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை எடுக்காவிடின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான முடிவினை கனேடிய ஆளும் கட்சி மீள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதன் ஊடாக மற்றைய நாடுகளும் இதே தீர்மானத்தை மேற்கொள்ளவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

0 Responses to பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்க வேண்டும்; ராதிகா சிற்சபேசன் கோரிக்கை