மேஷம்
தைரியத்தோடு செயல்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.
ரிஷபம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் வந்து சேரலாம்.
மிதுனம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பயணத்தால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.
கடகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க முன்வருவீர்கள். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.
சிம்மம்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
கன்னி
தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தன்நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.
துலாம்
கனவுகள் நனவாகும் நாள். வரவு திருப்தி தரும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
விருச்சகம்
சவால்களை சமாளிக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சி கூடும். பிறர் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரச்சினைகள் அகலும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
தனுசு
சுற்றத்தாரின் வரவால் சுகம் கூடும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டு.
மகரம்
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வியாபாரம், தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். பொதுநல ஈடுபாட்டில் ஆர்வம் ஏற்படும். ஆலய வழிபாடு ஆனந்தம் தரும்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.
மீனம்
வரவு அதிகரிக்கும் நாள். பெற்றோர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். தொலை பேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.




0 Responses to இன்றைய ராசி பலன் | 07.04.2014