Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 08.04.2014

பதிந்தவர்: தம்பியன் 08 April 2014

மேஷம்
ராமபிரான் வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். பண நெருக்கடிகள் தீரும். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.

ரிஷபம்
முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும். விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.

மிதுனம்
வசந்தகாலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

கடகம்
அனுமன் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். விருந்தினர் வருகை உண்டு. பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வங்கிச்சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலை உண்டு. புதிய பொருள் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கன்னி
மனதில் மகிழ்ச்சி கூடும் நாள். உற்றார், உறவினர்களின் வருகை உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.

துலாம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். தனலாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சகம்
மாருதி வழிபாட்டினால் மகிழ்ச்சி காண வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். பாராட்டும், புகழும் வந்து சேரும்.

தனுசு
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.

மகரம்
தன்நம்பிக்கை அதிகரிக்கும் நாள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல்&வாங்கல்கள் ஒழுங்காகும். வரவு திருப்தி தரும்.

கும்பம்
கனவுகள் நனவாகும் நாள். தொட்டகாரியம் வெற்றி பெறும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.

மீனம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 08.04.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com