லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி வியாபாரி ஷிரியன் தேவானி தனது மனைவி ஆனியின் கொலை வழக்கு விசாரணைக்காக தென்னாப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.
2010ம் ஆண்டு ஷிரியன் தேவானியும் இவரது மனைவியான ஆனியும் தேனிலவுக்காக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு சென்றுள்ளனர்.
கேப்டவுனில் ஒரு வாடகை காரில் இருவரும் சென்றபோது ஆனி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மங்கேனி என்பவரை வாடகைக்கு அமர்த்தி தேவானி தனது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மங்கேனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தேவானி தனக்கு மனநலம் சரியில்லை என்று கூறி லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் மனநலம் குணமாகாமல் அவரை விசாரணைக்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.
இதனால் தேவானி தென்னாப்பிரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு நேராக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவரது மனநிலை ஆராயப்பட்டு மனநலம் சரியில்லாமல் இருந்தால் அங்கேயே சிகிச்சை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.






0 Responses to தேனிலவில் மனைவி கொலை: நாடு கடத்தப்படும் இந்தியர்! (படங்கள் இணைப்பு)