Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 13-04-2014 | Raasi Palan 13-04-2014

பதிந்தவர்: தம்பியன் 13 April 2014

மேஷம்
திறமைகள் வெளிப்படும் நாள். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். பழைய கடனை அடைக்கப் புதிய கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். அரசு வழி அனுகூலம் உண்டு.

ரிஷபம்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் மாற்றம் செய்ய புதுமுயற்சிகளை எடுப்பீர்கள்.

மிதுனம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உபத்திரவங்கள் அகலும்.

கடகம்
பொருளாதார நிலை உயரும் நாள். வம்பு, வழக்குகள் தீரும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் இனிய உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்
வியாபார விருத்திக்கு வித்திடும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண இயலும்.

கன்னி
கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். உற்றார், உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். மாலையில் மனநிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

விருச்சகம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

தனுசு
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். வீடுகட்டும் பணிகளுக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

மகரம்
சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். வீடுகட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கும்பம்
விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்¢கள். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.

மீனம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியன்று வந்து சேரும். நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 13-04-2014 | Raasi Palan 13-04-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com